உதகை: மழை நீர் குளம் போல் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சவுத்வீக் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி முழுமை அடையாததால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் குளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி