அதன்படி, குன்னூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு சோதனை நடந்தது. உணவகம், தனியார் விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக கடைகளில் உள்ள காய்கறிகளை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன. இதுதொ டர்பாக நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.