உதகை அருகே மாயார் சாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி, நேற்று (மே 19) கம்பீரமாக சாலையை கடந்து சென்றது. அந்த நேரத்தில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் புலியை வீடியோவாக பதிவு செய்தனர். புலி சாலையை கடந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.