இந்நிலையில் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் காவிலேரை ஆனந்த் என்பவர் குப்பட்டாவைப் பயன்படுத்தி ஓட்டுனர்கள் பாலசுப்பிரமணியன், வேம்புராஜ் ஆகியோர்களை அப்பகுதியில் மண்ணை திருடியுள்ளதாகவும், வருவாய்த் துறையினர் அவர்களைப் பிடித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தடையுத்தரவு எண் 28406/2011 உள்ளதாலும், மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெறாமலும், பேரிடர் காலத்தில் மேற்கண்ட புலத்தில் மண்ணை தோண்டி பேரிடர் ஏற்படுத்தும் நோக்கில் திருடிச் சென்றுள்ளதால், மேற்கூறிய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 1. ஆனந்த், 2. வேம்புராஜ், 3. பாலசுப்பிரமணியன் ஆகியோர்கள் மீது பாரதிய தண்டனைச் சட்டம் (IPC) 303(2) மற்றும் 21(1)ன் கீழ் தமிழ்நாடு கனிமவளங்கள் சட்டம் 1957ன் படி வழக்குப் பதிவு செய்து கைது செய்து, அதனைத் தொடர்ந்து கோத்தகிரி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கான அடமான கடன் தொகை உயர்வு