அவருக்கு குன்னூர் ராணுவ பயிற்சி மையக் கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ், மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரிக் கமாண்டன்ட் வீரேந்திர வாட்ஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் உள்ள போர்
நினைவுத்தூணிற்கு மலர் வளையம் வைத்து இந்தியக் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார். ராணுவ இசைப்பேண்ட் குழு மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பும் நடைபெற்றது. பின்னர் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் உரையாடி அவர்களை கௌரவப்படுத்தினார். இதில் ராணுவ உயர் அதிகாரிகள், பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.