நகராட்சி வாகனம் விபத்து; வெளியான சிசிடிவி காட்சி

கழிவுகளை ஏற்றி செல்லும் நகராட்சி வாகனம் விபத்துக்குள்ளானது அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று (செப்.,30) மதியம் கழிவுகளை ஏற்றி செல்லும் நகராட்சி வாகனம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது வாகனம் கட்டுபாட்டை இழந்து வேறொரு வாகனத்தின் மீது மோதியது.

அதுமட்டுமல்லாது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இருந்த ஒருவர் மீதும் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீதும் நகாராட்சி வாகனம் மோதியது. அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
வாகனத்தை ஓட்டி வந்த நகராட்சி ஊழியர் சேகர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகராட்சி ஓட்டுநர் சேகர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி