இந்நிலையில் இன்று (அக்.,4) அதிகாலை 3 மணி அளவில் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை புல்லட் ராஜா மற்றும் கட்டபொம்மன் ஆகிய இரு யானைகள் உடைத்து அங்கிருந்த அரிசிகளை சாப்பிட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானை விரட்டும் குழுவினர் இரு யானைகளையும் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதைத் தொடர்ந்து தற்போது கல்வித் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்