நகராட்சி நிர்வாகத்தின் திட்டத்திற்கு வியாபாரிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடைகளை இடித்துக்கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வர், நீலகிரி எம்.பி., அரசு தலைமை செயலாளர், உள்ளாட்சித்துறை அமைச்சர், வணிகர் சங்க மாநில பேரமைப்பு தலைவர் ஆகியோரிடம் முறையிட்டனர்.
மேலும் நகரமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிகமாக இப்பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக வியாபாரிகளுக்கு கடைகளை காலிசெய்ய கோரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
15 நாட்களுக்குள் கடைகளை காலிசெய்து உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகம் செய்யும் பணியைத் துவங்கினர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.