கோத்தகிரி: சாலையை கடந்து சென்ற கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடியின் வீடியோ வைரல் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு, தேயிலைத் தோட்ட பகுதிகளில் இருந்தும் வனப்பகுதியில் இருந்தும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே அளக்கரை அரவேனு சாலையில் தேயிலைத் தோட்டத்தில் இருந்து வந்த கரடி, சாலையை கடந்து செல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி