நீலகிரி: ஈகைத் திருநாள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரமலான் ஈத் திருநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் நோன்பு இருந்து அனுதினமும் அல்லாஹ்வை நினைத்து பாவச் செயல்களில் ஈடுபடாமல் வழிபடுகின்றனர். 

மேலும் ஏழை எளிய மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளையும் ரமலான் திருநாளை முன்னிட்டு செய்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்றைய தினம் ரமழான் பண்டிகையை கொண்டாடும் விதமாக அதிகாலையில் பொதுவான இடத்தில் சூரிய உதயத்தை கண்டு சிறப்பு தொழுகை நடத்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பெரிய பள்ளிவாசல் மற்றும் குன்னூர் பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு அன்பைப் பரிமாறிக் கொள்ளும் விதமாக கட்டி அணைத்து ரமழான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் குன்னூர் ஊட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று கூடி பொதுவான ஒரு இடத்தில் சிறப்பு தொழுகை நடத்துகின்றனர். 

அந்த வகையில் இன்றைய தினம் ரமழான் பண்டிகையை முன்னிட்டு சுமார் 5000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அனைவரும் வெள்ளை நிற தொப்பிகள் உடன் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டு நிகழ்வு மற்றும் கூட்டம் கடல் அலை போல் காட்சி அளித்தது. மேலும் ரமழான் திருநாளில் சிறப்பாக ஏழை எளிய மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி