நீலகிரி: பாலியல் தொல்லை.. ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வசித்து வரும் தம்பதிக்கு 13 வயது மற்றும் 9 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். குன்னூரில் உள்ள ஒரு பள்ளியில் மூத்த மகள் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சில நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த சிறுமி சோகமாகவே இருந்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது தன்னிடம் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்த பின் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி