உதகை மெயின் பஜாரில் மொபைல் கடையில் துணிகர திருட்டு

நீலகிரி மாவட்டம் உதகை மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையின் பூட்டை உடைத்து, கடை போர்டையும் கிழித்து மர்ம நபர்கள் நேற்று முன்தினம் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பல விலையுயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி