ஊட்டியில் தொடரும் மழை: குளு குளுவென மாறிய காலநிலை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை காலத்திலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. நேற்று இரவு முதல் நீடித்த மழையால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஈரப்பதமான சூழல் உருவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெயிலில் இருந்து தப்பிக்க வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி