நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரத்தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பகல் நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் பெரிய மூன்று கரடிகள் உலா வந்துள்ளன. இந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். மேலும் மூன்று கரடிகள் அடிக்கடி உலா வருவது கிராம மக்களிடையே பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.