சமீபகாலமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இன்று கோத்தகிரியில் மாலை நேரத்தில் காட்டெருமைகள் ராம்சந்த் பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த காட்டெருமை கூட்டம் கோத்தகிரி ராம்சந்த் சாலை வழியாக காந்தி மைதானம் பகுதியில் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பயந்து ஓடினர். காட்டு எருமைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.