இவர் தற்போது நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்தபோது ராஜ்குமார் வீட்டில் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் இறந்து ஒரு சில நாட்கள் ஆகியிருக்கலாம் என்பது தெரிய வந்தது. மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். ராஜ்குமாரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இயற்கை மரணமா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?