கூடலூர் அருகே கம்மாத்தி–கூடலூர் சாலையில் ஒரு காட்டுயானை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து, நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவில் அருகே நின்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. முன்னதாக கம்மாத்தி பகுதியில் நுழைந்த யானை பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.