நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை–கொல்லூர் கல்லிகொல்லி கிராமத்தில் நேற்று மாலை, வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த நபர் ஒருவரை காட்டு யானை திடீரென நெருங்கியது. ஆபத்தை உணர்ந்த அவர் சாதுர்யமாக அங்கிருந்து தப்பியதால் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் யானைகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.