ஊட்டி அருகிலுள்ள சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் ஒற்றை காட்டு யானை அடிக்கடி நடமாடுவதால் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை உயர்ந்து, தீவனப் பற்றாக்குறை காரணமாக அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. யானை சாலையோரப் பகுதிகளில் தோன்றி சாலையைக் கடக்கும் காட்சி வைரலாகி உள்ளது.