மசினகுடி மாவனல்லா பகுதியில் மாடுகளை மேய்க்கச் சென்ற நாகியம்மாள் (69) மீது புதர் மறைவில் இருந்து புலி தாக்கி அவரை கொன்றுவிட்டது. வனத்துறையினர், போலீசார் இணைந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாகியம்மாளின் உடலை மீட்டனர். புலிகள் காப்பக இயக்குநர் உத்தரவின்பேரில் 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை, போலீசார் இணைந்து டிரோன் மூலம் புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.