ஊட்டி: முத்திரை தாள் மோசடி வழக்கு; 5 பேர் கோர்ட்டில் ஆஜர்

முத்திரை தாள் மோசடி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு மற்றும் 4 பேர் ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த திலக் அளித்த புகாரின் பேரில், போலி முத்திரை தாள்கள் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தது மற்றும் தேதிகளில் திருத்தம் செய்தது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் 5 பேர் ஆஜராக, ஆஜராகாத 3 பேருக்கு நீதிபதி ரவி வாரண்ட் பிறப்பித்தார். இந்த வழக்கு விசாரணை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி