மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் முத்துகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும், 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைத்து தனியார் வசூல் வேட்டையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
GAS சிலிண்டர் தட்டுப்பாடு: 10% கூடுதல் சிலிண்டர்கள் வழங்க மத்திய அரசு அறிவிப்பு