கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி (44) என்பவரை கேரள போலீசார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர். சுல்தான் பத்தேரி பகுதியில் ஒரு வீட்டின் கதவை உடைத்து நகை பறிக்க முயன்றபோது, பெண்ணின் அலறலால் தப்பியோடிய அவர், மணிச்சிறை பகுதியில் மீண்டும் கொள்ளை முயற்சி செய்தபோது பிடிபட்டார். பிடிபட்டபோது கத்தியால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.