கோத்தகிரி அருகே இந்திரா நகர் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்து வருவதாகவும், சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.