இதில் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை (ஜிஐஜி, ஸ்விகி, சோமாட்டோ, பிளிப்கார்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்) அதிக அளவில் பதிவு செய்யும் பொருட்டு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வருகிற புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறும்.
புதன்கிழமை அரசு விடுமுறையாக இருந்தால் அதற்கு அடுத்த அரசு வேலை நாட்களில் முகாம் நடைபெறும். இதுபோன்ற உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், புகைப்படம், நியமனதாருக்கான ஏதேனும் ஒரு அடையாள ஆவணம் ஆகிய அசல் ஆவணங்களுடன் ஊட்டி ஸ்டேட் பேங்க் லேன் பகுதியில் செயல்படும் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.