ஊட்டி அருகே மாயார் சாலையில் இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளதால், கரடிகள் பழங்களைத் தேடி சாலையோரங்களில் உலா வருகின்றன. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கரடிகள் இலந்தை மரங்களில் ஏறி பழங்களை உண்கின்றன. சில சமயங்களில் அவை சாலையைக் கடப்பதால் அபாய நிலை உருவாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி வீடியோ, செல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது. விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.