ஊட்டி: ஹெத்தையம்மன் பண்டிகை: குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு

நீலகிரி மாவட்டம் ஜெகதளா கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹெத்தையம்மன் பண்டிகை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. படுகர் இன மக்கள் கொண்டாடும் இந்த பண்டிகையில் ஜெகதளா, காரக்கொரை உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 48 நாட்கள் விரதம் இருந்த ஹெத்தைக்காரர்கள், பாரம்பரிய முறையில் ஊர்வலமாக சென்று நேற்று அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து காரக்கொரை மடிமனையில் நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பூசாரி உட்பட 11 பேர் தீ மிதித்து வழிபாடு செய்தனர். குண்டம் இறங்கியவர்களின் காலில் விழுந்து பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்றனர். காணிக்கை, சிறப்பு வழிபாடுகள், ஆடல்–பாடல்களுடன் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி