குன்னூரில் பெய்த கனமழையால் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாற்றுப் பாதையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.