ஊட்டி: பாலியல் தொல்லை – தாத்தாவுக்கு 5 ஆண்டு சிறை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவின் சகோதரருக்கு ஊட்டி மகிளா கோர்ட்டு நேற்று 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் நீதிபதி எம். செந்தில்குமார் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசு பரிந்துரைத்தது.

தொடர்புடைய செய்தி