தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ. 4½ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.