ஆட்சியர் லட்சுமி பவ்யா ஊட்டி அருகே ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை அவர் நேரில் சாப்பிட்டு பரிசோதித்தார். மேலும், பள்ளியில் கை கழுவும் வசதி அமைக்க ரூ. 30 ஆயிரம் ஒதுக்கி, பழுதடைந்த கட்டிடங்களை அகற்றவும், விளையாட்டு மைதானம் மற்றும் தடுப்பு வேலி அமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.