முதுமலை புலிகள் காப்பகம் அருகே, கல்லாம்பாளையம் பகுதியில் நேற்று (பிப்ரவரி 14) 1 வயது ஆண் குட்டியானை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், அதிகமான வயிற்றுப்போக்கால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். குட்டியானையின் முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.