மேலும் குழந்தை உட்பட 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களை குளிரிலிருந்து பாதுகாக்க நெருப்பு மூட்டியும், சுவெட்டர், தொப்பி உள்ளிட்ட ஆடைகளை அணிந்தும் வருகின்றனர். இந்த நிலையில் உதகைசாரந்த இத்தலார் பகுதியில் ஜெயபிரகாஷ் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை அப்பகுதியில் விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வியாழன் இரவு இவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் கடும் குளிர் காரணமாக வீட்டில் இரும்பு அடுப்பில் நெருப்பு மூட்டியுள்ளார். வீட்டில் இவருடைய மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4) மற்றும் உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் தங்கியிருந்தனர்.