குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வியக்கிழமை இரவு கண்ணன் (45) என்பவர் பைக்கில் வீடு திரும்பும்போது, பாய்ஸ் கம்பெனி லூர்துபுரம் பகுதியில் திடீரென காட்டெருமை தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.