ஈமசடங்கு முடித்துவிட்டு மீண்டும் குளித்தலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குன்னூர் மலைப்பாதையில் அமைந்துள்ள பர்லியார் குரும்பாடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த குன்னூர் காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும் 8 பேர்களை குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 14 பேர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்ட சாமிநாதன் (44) குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மீதமுள்ள பேர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு