நீலகிரி புதிய எஸ். பி. பிருந்தா பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். பிருந்தா நேற்று பொறுப்பேற்றார். ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்ட்டாக பணியாற்றிய இவர், ஊட்டியில் பொறுப்பேற்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய எஸ். பிருந்தா, மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நேர்மையான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி