நீலகிரி: தேனீக்கள் கொட்டியதில் வன ஊழியர்கள் காயம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வண்டிச்சோலை வனத்துறை நர்சரி கார்டனில் நேற்று (நவம்பர் 10) பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் ஐவர் தேனீக்கள் கொட்டுதலால் படுகாயமடைந்தனர். தனமணி, ரஞ்சினி, உஷா, புவனேஸ்வரி, சுசீலா ஆகியோர் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனமணிக்கு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி