நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டாக்டர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த தர்ணாவுக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். பழைய மருத்துவக்கல்லூரிகளில் இருந்து டாக்டர்களை ஆட்குறைப்பு செய்து புதிய மருத்துவமனைகளுக்கு மாற்றும் அரசின் நடவடிக்கை தவறு என்றும், இது நோயாளி சேவையை பாதிக்கும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். புதிய மருத்துவமனைகளுக்கு தனிப் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், பழைய மருத்துவமனைகளில் டாக்டர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடைமுறையை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.