நாள்தோறும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி மலை ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே உள்ள ஹில்க்ரோ பகுதியில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரயில் பாதையில் விழுந்த பாறையை அகற்ற ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Motivational Quotes Tamil