கோத்தகிரி–நெடுகுளா சாலையின் ராஜ்நகர் பகுதியில், தனியார் தோட்டத்தில் மரத்துண்டுகளை லாரியில் ஏற்றும் போது அரசு பஸ் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. கிரேன் ஆபரேட்டர் மனோஜின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. கிரேனின் இரும்பு கொக்கி பஸ்ஸின் முன் கண்ணாடியை சேதப்படுத்தியதில் கண்டக்டர் ஜெகன் உட்பட சில பயணிகள் லேசான காயமடைந்தனர். விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மனோஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.