20க்கும் மேற்பட்ட வாகனங்களில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மர்ம ஆசாமி யார் என்று தெரியாமல் இருந்தது. இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் அனைவரும் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில் அவர் மனநல நோயாளி காளிமுத்து என்பதும், இவர் பொம்மன் எஸ்டேட் பகுதியில் வசித்து வருவதாகவும், போதைப்பொருளால் மனநலம் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என சான்றிதழ் வைத்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.
மேலும் இவர் மீது சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆடை இன்றி நிர்வாணமாக நின்றதற்காக அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டவர் எனவும், கோத்தகிரி பகுதியில் கடந்த இரு வாரங்களாக சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக இவரை பிடித்து மனநல காப்பகத்திற்கு அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.