கூடலூரில் இருந்து கேரளா மாநில எல்லை வரை ரூ. 7½ கோடி மதிப்பில் சாலை புதுப்பிப்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது. கூடலூர்–நாடுகாணி–கீழ்நாடுகாணி வழியாக 3½ கி. மீ தூரம் சாலை கடுமையாக சேதமடைந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கூடலூர் பழைய பேருந்து நிலையம் முதல் செம்பாலா வரை 1 கி. மீ தூர சாலையை மேம்படுத்த ரூ. 1½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.