குன்னூர்-ஊட்டி சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று சி. டி. சி. காலனி அருகே அரசு டாடா சுமோ வாகனமும் கர்நாடக பதிவு எண்ணுடைய பென்ஸ் காரும் மோதியதில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருவங்காடு முதல் பிளாக் பிரிட்ஜ் வரையிலான பகுதியில் சாலை குழிகள் மூடப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.