நீலகிரி: காட்டு யானைகள்; கவனமுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்ளூர் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகமூடியுள்ள காட்டு யானைகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியைக் கொண்டுள்ள மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். 

இந்த நிலையில், கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. முள்ளூர் பகுதி. இங்கு பலாப்பழங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. சமவெளி பிரதேசத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியைப் படையெடுத்து வரத் தொடங்கியுள்ள காட்டு யானைகள் தற்போது முள்ளூர் பகுதியில் முகாமிட்டுள்ளதால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வனவாசிகள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி