இதில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மூன்று பேர் தப்பிய நிலையில் கார் ஓட்டுனர் அப்துல் அமீன் (31) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இவரிடம் மாவட்ட வன அலுவலர் கௌதம் மேற்கொண்ட விசாரணையில் ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் கடமானை வேட்டையாட கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பசீர் (36), ஷாபி வயது (31), சுனீர் வயது (39) ஆகியோருடன் வேட்டையாட வந்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் அப்துல் அமீன் (31) கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்று, 2 தோட்டாக்கள், 4 காலிதோட்டாக்கள், கத்திகள், தலையில் மாட்டக்கூடிய டார்ச் லைட் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பிய மூன்று பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!