உதகை அரசு மருத்துவக் கல்லூரி என்பது தமிழ்நாட்டிற்கு பெருமையாகும். பழங்குடியினர் மக்கள் தனியாக சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியுடன் தனி அறைகள், அதிநவீன மருத்துவ கருவி வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக ஏப்ரல் 5 மற்றும் 6ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைப்பார்.