நீலகிரி: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இங்கு உள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிப்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இணைந்து ஊட்டி சேரிங் கிராஸ் பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத தின்பண்டங்கள், காலாவதியான ஜூஸ் பாட்டில்கள், பழைய இறைச்சிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தார்.

மேலும் இனிவரும் காலங்களில் இந்த ஆய்வு தொடரும் எனவும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தாலோ உண்ணத்தகாத பழைய உணவுகள் இறைச்சிகள் பலகாரங்கள் விற்பனை செய்வது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டாலோ விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி