நீலகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் காணப்படுகிறது. 

இந்நிலையில் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரின்பவிலாஸ் பகுதியில் அதிகாலையில் ரட்சாத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காற்றுடன் கடுங்குளிர் மற்றும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி