இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2024 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரை நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான 72 பாலியல் குற்றவழக்குகள், 2 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் குற்றத்தை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு 3,516 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. 17 பாலியல் குற்றவழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 2 வழக்குகளில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் சாவுவரை சிறைத் தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்று தரப்பட்டுள்ளது. உடல் சார்ந்த குற்றங்கள் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 9 வழக்குகளில் அனைத்து எதிரிகளும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.