நீலகிரி மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

நீலகிரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதகையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 52 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பல்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு சுமார் 52,000 மதிப்புள்ள மோட்டார் பொருத்தப்பட்ட தையல் மிஷின், காதொலிக்கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி